ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் 86 போக்சோ வழக்குகள் பதிவு

ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் 86 போக்சோ வழக்குகள் பதிவு
X
ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் 86 போக்சோ வழக்குகள் பதிவு: மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தகவல்.

நம்பியூர் அருகே குருமத்தூரில் காக்கும் கரங்கள் என்ற திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோபி டி.எஸ்.பி ஆறுமுகம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

18 வயது நிறை எந்த சிறுமியையும் திருமணம் செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதால் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதோடு அவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் ஆரோக்கிய குறைபாடு உடன் பிறக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களிடம் பாலியல் நோக்கத்தோடு ஆபாச படங்களை காண்பித்தல், இரட்டை அர்த்தத்தில் பேசுதல், தவறான எண்ணத்தில் தொடுதல் மற்றும் பின்தொடர்தல் ஆகியவை போக்சோ சட்டத் தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோல் நடைபெற்றால் உடனடியாக அப்பகுதியில் உள்ள நபர்கள் 1098,181,100, என்ற எண்ணிலும் ஈரோடு மாவட்ட காவல்துறை வாட்ஸ்அப் எண் 9655220100 தொடர்பு கொள்ள வேண்டும்.

பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

இந்த வருடத்தில் நமது மாவட்டத்தில் 86 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகமாக அந்தியூர், பர்கூர், சத்திய மங்கலம், ஈரோடு டவுன் பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெறுகிறது.இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சுமார் 2600 இடங்களில் காவல்துறைகாக்கும் கரங்கள் அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் அதிக குற்றம் நடைபெறும் 120 கிராமங்களை கண்டறிந்து அங்கு சிறப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் காவல் துறை சார்பிலும், வருவாய்த்துறை மற்றும் இதர துறைகளின் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு உள்ளன. கடந்த 3 மாதமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெற்று உள்ளது. அவைகளை குறைக்கும் வகையில் இந்த விழிப் புணர்வு கூட்டங்களை நடத்தி வருகிறோம். கடந்த 4 மாதத்தில் 30 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது 11 குழந்தைகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர், இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!