பவானியில் குரூப்-4 தேர்வு மையத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

TNPSC Exams |TNPSC Exam Centres
X

மைலம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட குரூப்-4 தேர்வு மையத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா பார்வையிட சென்றார்.

TNPSC Exams- பவானி மைலம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு மையத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

TNPSC Exams- தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ளது.இதற்காக அனைத்து தேர்வு மையத்திலும் தேர்விற்கான முன் ஏற்பாடுகள் குறித்து வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள மைலம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் தாயார் செய்யப்பட்டு வருகிறது.


இந்தநிலையில், தேர்வு மையத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.தொடர்ந்து தேர்வு மையத்தில் தேர்வு எழுபவர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்து வட்டாட்சியர் முத்துகிருஷ்ணனிடம் கேட்டறிந்தார்.மேலும் தேர்வு எழுதுபவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக இருக்கும்படி வருவாய் துறையினருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.





அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!