ஈரோட்டில் மாவட்ட திட்டக் குழுக் கூட்டம்

ஈரோட்டில் மாவட்ட திட்டக் குழுக் கூட்டம்
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாவட்ட திட்டக்குழுத் தலைவரும், மாவட்ட ஊராட்சித்தலைவருமான நவமணி கந்தசாமி தலைமையில் நடந்த போது எடுத்த படம். உடன் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

ஈரோட்டில் மாவட்ட திட்டக் குழுக் கூட்டம் மாவட்ட திட்டக் குழுத் தலைவரும், மாவட்ட ஊராட்சித் தலைவருமான நவமணி கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

ஈரோட்டில் மாவட்ட திட்டக் குழுக் கூட்டம், மாவட்ட திட்டக் குழுத் தலைவரும், மாவட்ட ஊராட்சித் தலைவருமான நவமணி கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட திட்டக் குழுக் கூட்டம் மாவட்ட திட்டக் குழுத் தலைவரும், மாவட்ட ஊராட்சித் தலைவருமான நவமணி கந்தசாமி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவரும், துணைத்தலைவருமான ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் சீரமைத்தல், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தனிநபர் கழிப்பறை, அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டம், அயோத்திதாஸ் பண்டிதல் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், முதல்வரின் கிராமசாலைகள் மேம்பாட்டு திட்டம், நபார்டு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் அம்ரூத் 2.0, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய திட்டப்பணிகள் மற்றும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளில் செய்யப்பட வேண்டிய மேம்பாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் விவாதிக்கப்பட்டது. மேலும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மாவட்ட திட்டக் குழுத் தலைவரிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.

இக்கூட்டத்தில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஸ், மாநகராட்சி ஆணையாளர் மனிஷ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கஸ்தூரி உட்பட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள், நகர்மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!