ஈரோடு: மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டம்

ஈரோடு: மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டம்
X

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழுத்தலைவர்/ ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி எம்.பி. தலைமையில், மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழுத்தலைவர்/ ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி எம்.பி. தலைமையில், மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடைபெற்றது.


மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பணிகள், அவற்றின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டம், பிரதம மந்திரி கிராம் சாலைகள் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்க திட்டம், தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டம், தேசிய உணவு பாதுகாப்பத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் பணி, முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


இக்கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, கூடுதல் ஆட்சியர் மதுபாலன், மாவட்ட வன அலுவலர்கள் கௌதம் (ஈரோடு), கிருபாசங்கர் (சத்தியமங்கலம்), திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) டி.கெட்ஸி லீமா அமலினி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரூ.2 கோடி மோசடி..! துணை தாசில்தாரை ஏமாற்றிய சென்னை வாலிபர் கைது..!