ஈரோடு மாநகராட்சியில் ரூ.21.93 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாநகராட்சியில் ரூ.21.93 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
X

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் வேகத்தினை நீர் அழுத்தக் கருவியின் மூலம் சரிபார்த்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாநகராட்சி மூலம் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்ச் 7ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாநகராட்சி மூலம் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்ச் 7ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாநகராட்சி மண்டலம் 3 மற்றும் 4க்கு உட்பட்ட பகுதியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் முன்மாதிரியாக 6 வார்டுகளில் 24 x 7 குடிநீர் விநியோகம் செயல்படுத்த ரூ.21.93 கோடி மதிப்பீட்டில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் தரைமட்ட தொட்டிகளுக்கு விநியோகிக்கப்பட்டு, மின்மோட்டார் மூலம் மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு வந்தது. தற்பொழுது. இத்திட்டத்தின் மூலம் நேரடியாக மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.


மேலும், தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் குடிநீர் விநியோகிக்காமல், பகுதி பகுதியாக பிரித்து, நீரின் அழுத்தத்தினை அதிகப்படுத்தி மேல்தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றும் பொழுது, கீழ்நிலை தொட்டிகளில் தண்ணீர் ஏற்றும் அவசியம் இருக்காது. இதனால் பொதுமக்களுக்கு மின்சார கட்டணம் குறைவதோடு, குடிநீர் தேவையும் நிறைவாகும் திட்டமாகும்.

இதனைத் தொடர்ந்து, மண்டலம்-3க்கு உட்பட்ட முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி-2 மற்றும் மண்டலம்-4க்கு உட்பட்ட பாரதி நகர் மேல்நிலை தொட்டி ஆகிய இரண்டு பகுதிகளில் நீர் அழுத்த கருவி மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் வேகத்தினை நீர் அழுத்தக் கருவியின் மூலம் சரிபார்த்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, மாநகர பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் ஆனந்தன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story