பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஈரோடு ஆட்சியர் ஆய்வு

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பண்ணாரியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோவிலில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்ச் 27) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, அருகாமையில் உள்ள மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள், பந்தல், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தற்காலிக தடுப்பு சுவர்களை அமைத்தல், மருத்துவ குழுகள், தீத்தடுப்பு வாகனம் ஏற்பாடு செய்தல், தடையில்லா மின்சார வசதி, தரைதளத்தினை தூய்மையாக பராமரித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, திருவிழா நல்ல முறையில் நடைபெற ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் இரா.மேனகா, உதவி ஆணையர் சுகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் முத்தரசு உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu