ஈரோட்டில் டாம்கோ கடன்களுக்கான மேளா: மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்தார்!

ஈரோட்டில் டாம்கோ கடன்களுக்கான மேளா: மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்தார்!
X
ஈரோட்டில் சிறுபான்மையின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வழங்கப்படும் டாம்கோ கடன்களுக்கான மேளாவினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (ஏப்ரல் 21) துவக்கி வைத்தார்.

ஈரோட்டில் சிறுபான்மையின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வழங்கப்படும் டாம்கோ கடன்களுக்கான மேளாவினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (ஏப்ரல் 21) துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பி.பெ.அக்ரஹாரம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில், சிறுபான்மையின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வழங்கப்படும் டாம்கோ கடன்களுக்கான மேளாவினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்து, சிறுபான்மையின மக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டார்.


பின்னர், அவர் பேசியதாவது, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாம்கோ) மூலம் சிறுபான்மையின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக குறைந்த வட்டி விகிதத்தில் டாம்கோ கடன் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சிறுபான்மையின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வழங்கப்படும் டாம்கோ கடன்களுக்கான மேளா துவக்கி வைக்கப்பட்டுள்ளது. டாம்கோ திட்டம் என்பது குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதற்கான ஒரு திட்டமாகும். அனைத்து சிறுபான்மையினர்களுக்கும் இக்கடன் வழங்கும் திட்டம் பொருந்தும்.

இத்திட்டத்தில் பயனாளிகள் பயன்பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். மேலும் விண்ணப்பதாரர் தங்களது குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம்.


புதியதாக தொழில் செய்யவும் அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்யவும் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். இதில் தனிநபர் கடன், சுய உதவிக்குழு கடன், கைவினைக் கலைஞர் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கடனுதவி வழங்குவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் ரூ.20 லட்சம் வரை கடனுதவி வழங்கும் திட்டத்தில் ஆண்களுக்கு 8 சதவீத வட்டியிலும், ரூ.30 லட்சம் வரை கடனுதவி வழங்கும் திட்டத்தில் ஆண்களுக்கு 8 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டியிலும் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, கடனுதவி பெறுபவர்கள் அனைவரும் அதனை முறையாக தவணை காலத்திற்குள் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா, துணை ஆட்சியர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ந.நூர்ஜகான், இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் த.செல்வக்குமார், துணைப்பதிவாளர் மற்றும் பணியாளர் அலுவலர் பா.ரவிச்சந்திரன், பி.பெ.அக்ரஹாரம் நகர கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பா.ரவிக்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story