மே 15ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம்: ஈரோடு ஆட்சியர்!

மே 15ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம்: ஈரோடு ஆட்சியர்!
X
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வரும் மே 15ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வரும் மே 15ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் வைக்கப்பட வேண்டும். இதில் தமிழில் முதன்மையாகவும், பின்னர் ஆங்கிலத்திலும், அதற்கு பிறகு அவரவர் விரும்பும் மொழிகளிலும் எழுதப்பட வேண்டும். இதற்காக அடுத்த மாதம் (மே) 15ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

அதன்பிறகு தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களின் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். எனவே அனைத்து கடைகள், வணிக சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களின் முன்பு தமிழில் பெயர் பலகைகளை வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story