மகாவீர் ஜெயந்தி: நாளை ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

மகாவீர் ஜெயந்தி: நாளை ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்!
X
ஈரோடு மாவட்டத்தில் நாளை (10ம் தேதி) மகாவீர் ஜெயந்தி தினத்தையொட்டி, அனைத்து மதுக்கடைகள், மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (10ம் தேதி) மகாவீர் ஜெயந்தி தினத்தையொட்டி, அனைத்து மதுக்கடைகள், மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

மகாவீர் ஜெயந்தி நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் மதுபான உரிமதலங்களை நாளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால், நாளை மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. மேலும் அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Next Story