ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஏப்.2ல் துவக்கம்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி துவங்குகிறது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்ச் 26) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் குரூப் -1 போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 2ம் தேதி துவங்குகிறது. இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது விவரங்களை https://forms.gle/bQShXFvvpn2vTfpG7 என்ற கூகுள் ஃபார்ம் லிங்க்கில் வரும் மார்ச் 30ம் தேதிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த ஆண் மற்றும் பெண் இருபாலர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu