ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.22) முதல் ஜமாபந்தி!

ஈரோடு மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை (மே.22ம் தேதி) முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காண ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. அதன்படி, கோபி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) ஜமாபந்தி தொடங்கி வருகிற 29ம் தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது.
22ம் தேதி காசிபாளையம் உள்வட்டத்துக்குட்பட்ட தடபள்ளிக்கரை, சிங்கிரிபாளையம், அக்கரைகொடி வேரி, உடையகவுண்டன்பாளையம், சோழமாதேவிகரை, அளுக்குளி, போடிசின்னாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நடக்கிறது.
23ம் தேதி கோபி உள்வட்டத்துக்குட்பட்ட கோட்டுபுள்ளாம்பாளையம், வீரபாண்டி, பாரியூர், மொடச்சூர். குள்ளம்பாளையம், கலிங்கியம், லக்கம்பட்டி, அக்ரஹாரக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு நடக்கிறது.
27ம் தேதி சிறுவலூர் உள் வட்டத்துக்குட்பட்ட நாதிபாளையம், நாகதேவன் பாளையம். கொளப்பலூர், வெள்ளாங்கோவில், சிறுவலூர், கடுக்காம்பாளையம், சந்திராபுரம் பொலவக்காளிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் நடக்கிறது.
28ம் தேதி கூகலூர் உள்வட்டத்துக்குட்பட்ட அம்மாபாளையம், சவுண்டப்பூர், மேவாணி, கூகலூர், புதுக்கரைபுதூர், வெள்ளாளபாளையம் கிராமங்களுக்கும், 29ம் தேதி வாணிப்புத்தூர் உள்வட்டத்துக்குட்பட்ட கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், புஞ்சை துறையம்பாளையம், நஞ்சை துறையம்பாளையம், பேட்டைகரை, கொங்கர்பாளையம், அரக்கன்கோட்டை, வாணிபுத்தூர், பெரிய கொடிவேரி, பெருமுகை உள்ளிட்ட கிராமங்களுக்கும் நடைபெறுகிறது.
இதேபோல் சத்தியமங்கலம், பெருந்துறை ஆகிய வட்டங்களில் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 29ம் தேதி வரையும், அந்தியூர் வட்டத்தில் நாளை முதல் வருகிற 28ம் தேதி வரையும், பவானி, நம்பியூர், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களில் நாளை முதல் 27ம் தேதி வரையும், தாளவாடி வட்டத்தில் நாளையும் ஜமாபந்தி நடக்கிறது.
சனி, ஞாயிறு, திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் ஜமாபந்தி நடைபெறும். எனவே பொதுமக்கள் அந் தந்த தாலுகா அலுவலகங்களில் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu