ஈரோடு மாவட்டத்தில் 3 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 3 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 2024-25 செலவின ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மேற்கொண்ட பணிகளை சமூகத் தணிக்கை மேற்கொண்டு சமூக தணிக்கை நிறைவு பெறும் நாளான வருகிற மே.23ம் தேதி பெருந்துறை வட்டாரத்தை சார்ந்த திங்களூர் கிராம ஊராட்சியிலும், வருகிற மே.30ம் தேதி சத்தியமங்கலம் வட்டாரத்தை சார்ந்த இக்கரை நெகமம் கிராம ஊராட்சி மற்றும் அம்மாப்பேட்டை வட்டாரத்தை சார்ந்த மாணிக்கம்பாளையம் கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது.
கிராம சபை நடைபெறும் இடம், நேரம், ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். கிராமசபை கூட்டம் நடைபெறும் திங்களூர், இக்கரை நெகமம் மற்றும் மாணிக்கம்பாளையம் கிராம ஊராட்சிகளில் கூட்டம் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu