ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 352 மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்

ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 352 மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று, குறைகளை கேட்டறிந்த போது எடுத்த படம்.

ஈரோட்டில் இன்று (பிப்.24) நடந்த வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 352 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (பிப்.24) நடைபெற்றது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், சாலை, குடிநீர் மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 352 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story
Similar Posts
சென்னிமலையில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் சாமிநாதன் 62 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்!
ஈரோட்டில் வரும் பிப்.28ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்
உடல் எடையை குறைக்க உதவும் 3 சுவையான சாலட் வகைகள்
ஈரோடு மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
உதவி பேராசிரியர் மீது பணி ஒழுங்கு நடவடிக்கை
அ.தி.மு.க., வின் சாதனைகளை பகிர்ந்துகொண்ட இளங்கோவன்
ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 352 மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்
ஈரோட்டில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் முத்துசாமி 110 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்!
ஈரோடு சோலாரில் முதல்வர் மருந்தகம் திறப்பு: அமைச்சர் முத்துசாமி விற்பனையை துவக்கி வைத்தார்!
சேலத்தில் பரத நாட்டியத்தின் பெரும் விழா – 300 மாணவியர்களுடன் நாட்டியாஞ்சலி
வி.இ.டி., கலை கல்லுாரியில் ஆறாவது ஆண்டு விளையாட்டு விழா
பெண்கள் பெட்டியில் பயணித்த ஆண்கள் – 47 பேர் கைது!
சிறுத்தை பிடிக்க புதிய யுக்தி – பவானியில் கேமரா மூலம் கண்காணிப்பு