ஈரோட்டில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
இந்திய அரசியலமைப்பு தினத்தை (Constitution day) முன்னிட்டு இன்று (26.11.2024) இந்திய அரசியலமைப்பு முகப்புரையை ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்ட போது எடுத்த படம்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இந்திய அரசியலமைப்பு முகப்புரையை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.
2024ம் ஆண்டு, நவம்பர் 26ம் நாள் 75வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் இந்திய சட்டத்தின் முகவுரையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (நவ.26) 75வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், இந்திய அரசியலமைப்பு முகப்புரையை அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஹம்மது குதுரத்துல்லா (பொது), செல்வராஜ் (வளர்ச்சி) உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோல், நம்பியூர் அருகே திட்டமலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரியின் முதல்வர் சூரியகாந்தி தலைமையில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் யூனஸ், அனைத்துத் துறை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணாக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu