ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு
X

ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்.1) ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்.1) ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்தும், அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, கலைஞரின் கனவு இல்லம், குடிநீர் திட்டப்பணிகள், சாலை மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் மேலும் நீண்ட கால நிலுவையில் உள்ள அலுவலக கோப்புகள் மற்றும் முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் உள்ளிட்ட பதிவேடுகளை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோரிக்கை மனுக்கள் குறித்த பதிவேடு, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கோரிக்கை மனுக்கள் குறித்த பதிவேடு, முடிவுற்ற திட்டப்பணிகளுக்கு பட்டியல் சமர்ப்பித்தல் குறித்த பதிவேடு, வரிவசூல் குறித்து நிலுவையில் உள்ள இனங்கள் குறித்த ஆய்வு, இணையதளத்தின் மூலம் கட்டிட அனுமதி நிலுவை குறித்த விபரங்கள், 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான கலைஞரின் கனவு இல்லம் பயனாளிகள் தேர்வு குறித்த பட்டியல் விபரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) ரவிச்சந்திரன், தனலட்சுமி (கிராம ஊராட்சி) வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், உதவி பொறியாளர் பிரகாஷ் உட்பட துறை சார்ந்த பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story
Similar Posts
கர்நாடகாவில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது
ஈரோடு திண்டலில் முதல்வர் மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு
ஈரோட்டில் அரசு அதிகாரியின் பெயரில் போலி கடிதம் தயாரித்து பள்ளிகளில் குறும்படம் காண்பித்து பணம் வசூல்: 3 பேர் கைது
கோபி அருகே வீட்டுக்குள் நுழைந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு
ஈரோடு: மொடக்குறிச்சி அருகே சாமிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு எலுமிச்சம்பழம் ரூ.13 ஆயிரத்துக்கு ஏலம்
உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு!..தீயணைப்பு வீரர்கள் மீட்பு
கோபி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம்  5 பவுன் நகை பறிப்பு
ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது!
புன்செய்புளியம்பட்டியில் மரக் கைவினை பொருள்கள் பயிற்சி நிறைவுவிழா..!
மகா சிவராத்திரி: சத்தியமங்கலம் அருகே 1 லட்சம் சிவலிங்கங்களுக்கு சிறப்பு பூஜை
சாலையோரம் நின்று கொண்டிருந்தவா்கள் மீது காா் மோதியதில் 5 போ் காயம்
கோபியில் மகா சிவராத்திரியையொட்டி பரத நாட்டிய நிகழ்ச்சி