12ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஈரோடு ஆட்சியர் ஆய்வு

12ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஈரோடு ஆட்சியர் ஆய்வு
X

ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (மார்ச் 3) தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (மார்ச் 3) தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்கியது. இதைத் தொடர்ந்து, குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அவர் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வு இன்று (மார்ச் 3) துவங்கி வரும் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை 223 பள்ளிகளைச் சேர்ந்த 22,540 மாணவ, மாணவியர்களும், தனித்தேர்வர்கள் 234 மாணவ, மாணவியர்களும் எழுதுகின்றனர்.

இதில், இன்று 22,287 மாணவ, மாணவியர்களும், 5 தமிழ் பாட விலக்கு (தமிழ் மொழி அல்லாத பாடப்பிரிவு) மாணவ, மாணவியர்களும், 164 தனித்தேர்வர்களும் எழுதினர். இதில் 437 சலுகைகள் பெற்று தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களும் தேர்வு எழுதியுள்ளனர்.

இத்தேர்விற்கு 108 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 4 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், தனித் தேர்வர்களுக்கு 5 தனித் தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு மாணவ, மாணவியர்கள் செல்லும் வகையில் 6 மலைப்பகுதி வழித்தடம் உட்பட 27 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4 விடைத்தாள் சேகரிப்பு மைங்களும், 3 விடைத்தாள் திருத்தும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தேர்விற்கு 108 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்களும் மற்றும் 170 பறக்கும் படை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் மார்ச் 5ம் தேதி முதல் 27ம் தேதி வரை 11-ம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறவுள்ளது.

மேலும், பல்வேறு துறை அலுவலர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு 10, 11, மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சார வசதி, மருத்துவ வசதி மற்றும் காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Next Story