போதைப் பொருள் விற்பனை குறித்து புகார் தெரிவிக்க செயலி: ஈரோடு ஆட்சியர் தகவல்

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு செயலி படம்.
போதைப் பொருள்கள் பயன்பாடு, விற்பனை குறித்து புகாா் அளிக்க வசதியாக தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள செயலி மூலம் பொதுமக்கள், மாணவா்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் மது, போதைப்பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக "போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு (DRUG FREE TN)" என்ற கைப்பேசி செயலி அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் https://admin.drugfree-tn.com/ என்ற இணையதளம் மூலம் இதற்கான தீர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த செயலி மூலம் புகார் அளிக்கும் நபர்களின் அடையாளம் இரகசியமாக வைக்கப்படும். மேலும் இந்த செயலி மூலம் பெறப்படும் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வெளிப்படையாக தெரிந்து கொள்ள இயலும்.
எனவே, பொதுமக்கள் போதைப்பொருட்கள் நடமாட்டம் குறித்து மேற்காணும் செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம். இதுகுறித்து கண்காணிப்பதற்காக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் துணை ஆய்வாளர் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu