ஈரோடு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 320 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, குறைகள் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கேட்டறிந்த போது எடுத்தப் படம்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.9) நடந்த குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 320 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவுறுத்தி உள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (டிச.9) திங்கட்கிழமை தலைமையில் நடைபெற்றது.
இந்தக் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு, கழிவுநீர் அகற்றுதல், சாலை வசதி, தையல் இயந்திரம் வேண்டுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான கடனுதவி மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 320 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu