ஈரோட்டில் அக்.25ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

ஈரோட்டில் அக்.25ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
X

வேலைவாய்ப்பு முகாம் (பைல் படம்).

ஈரோட்டில் அக்.,25ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.

ஈரோட்டில் அக்.,25ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி இம்மாதம் அக்டோபர் 25ம் தேதி (நாளை மறுநாள்) வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது.

மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வாயிலாக நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 86754 12356, 94990 55942 என்ற எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story
Similar Posts
சத்தியமங்கலம் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயற்சி: ஒருவர் கைது
79 வயதில் விவாகரத்து கேட்ட கணவர், 47 லட்சம் ஜீவனாம்சம் வழங்க சம்மதித்த மனைவி
கோபி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க விரைவு சேவை குழு அமைப்பு
ஈரோட்டில் 15வது பட்டாலியன் என்சிசி ஆண்டுப் பயிற்சி முகாம்
ஈரோட்டில் அக்.25ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
கொசுத்தொல்லையா? இத செய்யுங்க.. அப்றம் ஒரு கொசு கூட வராது..!
மலம் கழிக்கிறப்ப ஏதாவது தட்டுப்படுதா? அலட்சியம் வேண்டாம்..!
மனித ஆரோக்கியத்தில் எலும்புகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் உணவுகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
அடிக்கடி செரிமானக் கோளாறுகள் ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா?
சிசேரியன் பிரசவத்தால்  தாய்மார்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
அசைவ உணவுகளை காட்டிலும் சைவ உணவுகளில்  ஆரோக்கியம் அதிகம்.... எப்படி?
வெண்கலப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறதா?