ஈரோடு மாவட்டத்தில் மே மாதம் பாமாயில், பருப்பு பெற இயலாதவர்கள் கவனத்திற்கு..!
துவரம் பருப்பு, பாமாயில் (கோப்புப் படம்).
ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் மே மாதம் பாமாயில், பருப்பு பெறாதவர்கள் ஜூன் மாதத்தில் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், பழைய விற்பனை முனைய கருவிக்கு பதில், புதிய கருவி வழங்கியதால், கடந்த மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வழங்கப்படவில்லை.
இதேபோல், தாமதமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்பு அனுப்பியது உள்ளிட்ட காரணங்களால், பல கடைகளில் கடந்த மாதத்திற்கு உரிய பருப்பு, பாமாயில் வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாதத்தில் அந்தப் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை (ஜூன்.7) இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மே 2024 மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெறாத குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்திற்கான ஒதுக்கீட்டினை நடப்பு ஜூன் 2024 மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu