ஈரோட்டில் நலிவடைந்த காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மாவு பைகள் வழங்கல்

ஈரோட்டில் நலிவடைந்த காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மாவு பைகள் வழங்கல்
X

நலிவடைந்த காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மாவு பைகளை ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்) ராமசந்திரன் வழங்கிய போது எடுத்த படம்.

ஈரோட்டில் நலிவடைந்த காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மாவு பைகள் வழங்கப்பட்டன.

ஈரோட்டில் நலிவடைந்த காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மாவு பைகள் வழங்கப்பட்டன.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மாவட்ட காசநோய் மையத்தில் நிக்சய் மித்ரா திட்டத்தின் சார்பாக நலிவடைந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து மாவு அடங்கிய பைகள் வழங்கும் விழா நடைபெற்றது.


ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஈரோடு ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தன்னார்வ தொண்டு அமைப்பின் தலைவர் சின்னசாமி மற்றும் வெங்கிட்டுசாமி ஆகியோர் கலந்து கொண்டு நலிவடைந்த காச நோயினால் பாதிக்கப்பட்ட 250 நபர்களுக்கு ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் அமைப்பின் மூலமாக மாதந்தோறும் ஊட்டச்சத்து மாவு பைகளை கொடையாக வழங்கும் சேவையை தொடங்கி வைத்தனர்.

இதன் மூலமாக மாதந்தோறும் ஈரோடு மாவட்டத்தில் காச நோயினால் பாதிக்கப்பட்ட 250 பயனாளிகள் பயன்பெற உள்ளனர். ஈரோடு மாவட்ட துணை இயக்குநரால் நலிவடைந்த காச நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையுடன் கூடிய ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இவ்விழாவில் ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவர் சின்னசாமி மற்றும் வெங்கிட்டுசாமி, காச நோய் மைய மருத்துவ அலுவலர் மரு.சந்திரசேகரன், மாவட்ட காசநோய் மைய ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன், சுதன்சர்மா, ஊழியர்கள் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story
ai automation in agriculture