ஈரோட்டில் சத்துணவு ஊழியர்கள் கவன‌ ஈர்ப்பு தர்ணா போராட்டம்

ஈரோட்டில் சத்துணவு ஊழியர்கள் கவன‌ ஈர்ப்பு தர்ணா போராட்டம்
X

காளை மாடு சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான தர்ணா போராட்டம் ஈரோடு காளை மாடு சிலை அருகே நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு வழங்கும் காலைச் சிற்றுண்டி திட்டத்தை சத்துணவ ஊழியர்கள் மூலமே நிறைவேற்ற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஈரோடு காளை மாடு சிலை அருகே முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தர்ணா போராட்டம் நடந்தது.


போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோ.தனுஷ்கோடி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சுப்புலட்சுமி, செல்வி, மஞ்சுளா , சபானா, ஆஸ்மி, மணிமேகலை, சாந்தி, கௌரி , கொடிமலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் சசிகலா வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பாஸ்கர் பாபு தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.


இந்த போராட்டத்தின் போது, தமிழ்நாடு அரசு வழங்கும் காலைச் சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமே நிறைவேற்ற வேண்டும். ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஓய்வுதியம் வழங்கவேண்டும். பணிக்கொடை அமைப்பாளருக்கு ரூ.5‌ லட்சமும் சமையலர் உதவியாளருக்கு ரூ.3‌ லட்சமுமாக உயர்த்தி வழங்கவேண்டும். காலிப் பணி இடங்களை நிரப்பிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது