பவானி கூடுதுறையில் திதி, தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

பவானி கூடுதுறையில் திதி, தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்
X

பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்.

பவானி கூடுதுறையில் புனித நீராடி திதி, தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் குவிந்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள கூடுதுறையில் பவானி ஆறு மற்றும் காவிரி ஆற்றுடன் கண்ணுக்கு புலப்படாத தேவர்களின் அமுத நதியும் கலப்பதாக ஐதீகம்.எனவே 3 ஆறுகள் சந்திக்கும் பவானி கூடுதுறையில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களுடைய ஆசி தங்களுடைய குடும்பத்தினருக்கு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்காக பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வருவது வழக்கம்.


இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) தை அமாவாசையையொட்டி 2 ஆண்டுகளுக்கு பிறகு பவானி கூடுதுறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அதிகாலை பொதுமக்கள் முதலே வந்து கூடுதுறையில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்திருந்ததால், பவானி கூடுதுறையில் கூட்டம் அலை மோதியது. இதையொட்டி நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் கைகளில் சானிடைவர் மூலம் கைகள் கழுவிய பிறகே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சென்றனர். மேலும், பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!