சென்னிமலை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு

சென்னிமலை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு
X

வெள்ளோடு ஊராட்சி, செம்மாண்டாம்பாளையம் காலனி பகுதியில், கிராமப்புற வீடுகள் பழுது சீரமைக்கப்பட்டு வரும் பணியினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளியுடன் கலந்துரையாடினார்.

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குமாரவலசு, வடமுகம் வெள்ளோடு ஊராட்சிப் பகுதிகள் மற்றும் சென்னிமலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (டிச.3) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது, சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், குமாரவலசு ஊராட்சி, வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு பகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.4.38 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 22 ஊராட்சிகளைச் சேர்ந்த 434 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, வடமுகம் வெள்ளோடு ஊராட்சி செம்மாண்டம்பாளையம் காலனி பகுதியில் ராமன் வீடு முதல் மாரியம்மன் கோவில் வரை 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.11.39 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளத்துடன் கூடிய வடிகால் அமைக்கப்பட்டு வருவதையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 143 வீடுகளுக்கு ஆணை வழங்கப்பட்டதில் இன்று சென்னிமலைபாளையம் புதூர் பகுதியில் இத்திட்டத்தின் கீழ் தலா ரூ.3.10 லட்சம் வீதம் ரூ.15.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 5 வீடுகளை மாவட்ட பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளியுடன் கலந்துரையாடினார்.

மேலும் செம்மாண்டம்பாளையம் பகுதியில் ஊரக குடியிருப்புகள் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் 259 வீடுகள் மறு சீரமைக்கப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து, மாரியம்மாள் என்பவரின் வீடு மறுசீரமைக்கப்பட்டவதை பார்வையிட்டு, உரிமையாளரோடு திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், தலா ரூ.55 ஆயிரம் வீதம் ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டில் 4 வீடுகள் சீரமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இதனையடுத்து, சென்னிமலை பேரூராட்சி அம்மாபாளையத்தில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.18.13 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் அபிவிருத்தி பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி இளங்கோ, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர் பாபு, பாலமுருகன், ஒன்றிய பொறியாளர் பாண்டியராஜன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story
டெய்லியும் நீங்க வெவ்வேற டைம்ல தூங்குனா என்ன ஆகும் தெரியுமா..?