அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
X

அம்மாபேட்டை குறிச்சி பூச்சிக்கல்லூர் ரோடு முதல் இராமாட்சிபாளையம் வரை சாலை அமைக்கப்படவுள்ள இடத்தினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (நவ.14) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (நவ.14) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், பூனாட்சி ஊராட்சி செம்படம்பாளையத்தில் ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினையும், அதே பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, அதே பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, அம்மாபேட்டை வட்டாரம் அட்டவணைபுதூர் கிராமத்தில் ஜே.கே.கே. முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களுடன் இணைந்து புல எண் 102 இல் மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை கள ஆய்வு மேற்கொண்டார்.


இதனையடுத்து, கணக்கெடுப்பு பணி விபரம், பயிர் சாகுபடி பரப்பு விவரம், பயிர் கணக்கெடுப்பினை மின்னணு முறையில் எவ்வாறு செயல்படுத்துவது, பயிர் கணக்கெடுப்பு மொபைல் செயலி செயல்படும் விபரம் குறித்து கேட்டறிந்தார். ஈரோடு மாவட்டத்தில் மின்னணு முறையில் பயிர் கணக்கெடுப்பு 48 சதவீதம் முடிக்கப்பட்டுள்ள நிலையில், கணக்கீடு செய்யும் பணியினை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறிச்சி ஊராட்சி பூச்சிக்கல்லூர் ரோடு முதல் இராமாட்சி பாளையம் வரை ரூ.1 கோடி மதிப்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், குறிச்சி கிராமத்தில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.14.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரைதளத் தொட்டியினையும், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


முன்னதாக, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆண்டு ஆய்வு மேற்கொண்டு, முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், பொது நிதி 15 வது நிதிக்குழு மானியம், நாட்குறிப்பு, ஜல்ஜீவன் மிஷன், வரி வசூல், மேல்நிலை நீர் தேக்க தொட்டி, கலைஞரின் கனவு இல்லம், பழுதடைந்த ஊரக வீடுகளை சீரமைத்தல் திட்டம் உள்ளிட்ட பணிகள் தொடர்பான பதிவேடுகளை பார்வையிட்டார்.

மேலும், நேற்று (நவ.13) தமிழ்நாடு முதலமைச்சர் அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புதிய கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து, நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜ், வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) தமிழ்ச்செல்வி, வேளாண்மை உதவி இயக்குநர்கள் பவானி, சசிகலா, மேனகா, அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகர், செயற்பொறியாளர்கள் சிவபிரசாத், முருகேசன், ஜே.கே.கே. முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி பேராசிரியர் குமரேஸ்வரன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!