ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலையில் இருந்து மதியம் வரை வெயில் அடித்தது. இதைத்தொடர்ந்து மாலை 3 மணிக்கு மேல் கருமேகங்கள் வானில் சூழ்ந்தன. 5. மணி அளவில் மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் மி.மீ பின்வருமாறு:-

பவானி - 16.0 மி.மீ

சத்தியமங்கலம் - 8.0 மி.மீ

தாளவாடி - 5.0 மி.மீ

நம்பியூர் - 8.0 மி.மீ

எலந்தகுட்டைமேடு - 4.4 மி.மீ

அம்மாபேட்டை - 18.2 மி.மீ

கொடிவேரி - 6.0 மி.மீ

வரட்டுப்பள்ளம் - 70.0 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 135.6 மி.மீ

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 7.97 மி.மீ

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி