போட்டித் தேர்வு குறித்து பயிற்சி அளித்த காவல்துறை துணைத்தலைவர்

போட்டித் தேர்வு குறித்து பயிற்சி அளித்த காவல்துறை துணைத்தலைவர்
X

கோபியில் தமிழக காவல்துறை (சட்டம் ஒழுங்கு) துணைத்தலைவர் அருளரசு போட்டித் தேர்வு குறித்து பயிற்சி அளித்தார்.

கோபியில் திமுக சார்பில் நடந்த போட்டி தேர்விற்கான இலவசபயிற்சி வகுப்பில் தமிழக காவல்துறைதுணைத்தலைவர் அருளரசு பேசினார்

தமிழ்நாடு தேர்வாணைய குழு சார்பில் குரூப் 4 ற்கான தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கோபி, டி.என்.பாளையம், நம்பியூர் ஆகிய இடங்களில் இலவசமாக பயிற்சி வகுப்புகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும் 800 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.இதற்காக ஈரோடு வடக்கு மாவட்ட திமுக, மற்றும் டி.என்.பாளையம், நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் சிறந்த பயிற்சியாளர்களை வைத்து, மதிய உணவுடன், இலவசமாக பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று கோபியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் தமிழக காவல்துறை (சட்டம் ஒழுங்கு) துணைத்தலைவர் அருளரசு ஐ.பி.எஸ். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.


அப்போது மாணவர்கள் எதை படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும் எனபதுடன் போட்டித்தேர்விற்கு தயாராகும் முறை, தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் முறை குறித்து ஒரு மணி நேரம் சிறப்பு பயிற்சி அளித்தார்.வழக்கமாக போட்டி தேர்வு பயிற்சி வகுப்பில் பாடதிட்டத்தின் அடிப்படையில் பயிற்சி மட்டுமே அளிக்கப்படும் நிலையில் தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு உதவி தலைவரின் பேச்சு போட்டி தேர்விற்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கு பயன் உள்ளதாக அமைந்தது.

முன்னதாக ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் சிறப்பு விருந்தினர் தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு உதவி தலைவர் அருளரசுவை வரவேற்று நினைவு பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில் கோபி நகராட்சி தலைவர் நாகராஜ், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் வெற்றி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது