ஈரோடு மண்டல அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மண்டல அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

சத்தியமங்கலம் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை கண்டித்து ஈரோடு மண்டல அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 7-ம் கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் 5 சதவிகித ஊதிய உயர்வுக்கு ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் இந்த பேச்சு வார்த்தையை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்த பின் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ஈரோடு மண்டல அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் சத்தியமங்கலம் பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளரும் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினருமான பண்ணாரி முன்னிலையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோபி சட்ட மன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கலந்து கொண்டு 14-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை கண்டித்து 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி..கருப்பண்ணன், ராமலிங்கம், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டு ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!