பவானியில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
பவானியில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு ராணுவ பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் முறைகள் அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே இளைஞர்கள் ராணுவப் பணியில் ஈடுபட வழி வகுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதற்கிடையே வடமாநிலங்களில் போராட்டம் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானியில் அந்தியூர் பிரிவில் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டுமென அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் ராணுவ பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும் என்பதால் இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என அனைத்து இந்து இளைஞர் மன்றத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu