ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
X

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

3 வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க ஊரக கூடாது. தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தை நகர் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் கலால் வரியை குறைத்து அனைத்துப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்.கொரோனா காலத்தில் முன் களப்பணி பணியாளர்களுக்கு பாதுகாப்பும், வசதிகளும் உரிய காப்பீடு வேண்டும் என்பது உட்பட வழங்க பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி ஈரோடுசூரம்பட்டி நால்ரோட்டில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் சுப்ரமணியன், எச்.எம். எஸ். மாவட்ட செயலாளர் சண்முகம், எல்.பி.எப் மாவட்ட செயலாளர் கோபால், எம்.எல். எப். மாவட்ட காளியப்பன். செயலாளர் எல்.டி.யு.சி. மாநில செயலாளர் கோவிந்தராஜ், டி.டி.எஸ்.எப். மாநில தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் முத்துசாமி, மாநில துணைத் தலைவர் துளசிமணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் விவசாய சங்கங்களை சேர்ந்த ஏராளமானவர்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?