மொடக்குறிச்சியில் பழைய பள்ளி கட்டிடம் இடித்து அகற்றம்

மொடக்குறிச்சியில் பழைய பள்ளி கட்டிடம் இடித்து அகற்றம்
X

ஆய்வில் ஈடுபட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி. 

மொடக்குறிச்சி அருகே பழைய கட்டிடத்தை இடித்து அகற்றும் பணியினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை கணக்கெடுத்து, அதனை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் அறிவுறுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கஸ்பாபேட்டை ஊராட்சியில், உள்ள செல்லப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 65 ஆண்டுகள் முடிந்த நிலையில், மிகவும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பழைய பள்ளிக்கட்டிடம் இடிக்கும் பணியினை, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தொடர்ந்து, செல்லப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்பட்டு வரும் சமையலறைக் கூடம், பள்ளி வகுப்பறை, தண்ணீர்த் தொட்டி ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!