பவானியில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த கோரிக்கை

பவானியில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த கோரிக்கை
X

பைல் படம்.

பவானி சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. அப்போது இந்த மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் பவானி, லட்சுமி நகர், காளிங்கராயன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதி என 23 இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பெண்களை வைத்து லாட்டரி சீட்டுகளை எழுதி வாட்ஸ்அப் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால், தினக்கூலி தொழிலாளர்கள், லாட்டரி சீட்டு பணத்தை செலுத்தி தங்களது வருமானத்தில் இருந்து வருகின்றனர். பல பெண்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது. எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு சட்டவிரோதமாக நடைபெறும் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture