ஈரோட்டில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு

ஈரோட்டில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
X

பைல் படம்.

கனமழையால் ஈரோடு மார்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது. ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் கடந்த 10 நாட்களாக காய்கறி வரத்து குறைந்துள்ளதால், காய்கறி விலைகள் விலை உயர்ந்துள்ளது.

குறிப்பாக தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்று நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 -க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி கடைகளில் சில்லரைக்கு ரூ.120 வரை விற்கப்படுகிறது. இதுபோல் 'நேதாஜி மார்க்கெட்டில் ஒரு கிலோ கத்தரிக்காய்-ரூ.120, வெண்டைக்காய்-ரூ.70. பீர்க்கங்காய்-ரூ.60. புடலங்காய்-ரூ.60. முள்ளங்கி - ரூ.50. கேரட்-ரூ.60, பீட்ரூட்-ரூ.40, கருப்பு அவரைக்காய்-ரூ.130, பெல்ட் அவரைக்காய்-ரூ.100, முருங்கைக்காய்-ரூ.150, பச்சை மிளகாய்-ரூ.40, காலிப்ளவர் - ரூ. 50, உருளைக் கிழங்கு-ரூ.40-க்கு விற்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!