பொதுமக்கள் பார்வைக்காக ஈரோடு வந்த அலங்கார வாகனம்: மலர் தூவி வரவேற்பு

பொதுமக்கள் பார்வைக்காக ஈரோடு வந்த அலங்கார வாகனம்: மலர் தூவி வரவேற்பு
X

குடியரசு தின அலங்கார வாகனத்தை அமைச்சர் முத்துசாமி மலர்தூவி வரவேற்ற காட்சி.

குடியரசு தின விழா அலங்கார வாகனங்கள் ஈரோடு மாவட்டத்திற்கு வந்ததையொட்டி, அமைச்சர் முத்துசாமி மலர்தூவி வரவேற்றார்.

சென்னையில் குடியரசுத் தின விழாவில் பங்கேற்ற தமிழக அரசின் அலங்கார ஊர்தியினை ஈரோடு மாவட்ட எல்லையில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி மலர்தூவி வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

குடியரசு தினத்தன்று புதுதில்லியில் நடைபெற்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. முதல்வர் வேண்டுகோள் விடுத்தும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த அலங்கார உறுதியில் குறிப்பாக தமிழகத்தில் விடுதலைக்காக பாடுபட்ட உயிர் நீத்த தலைவர்களின் சிலைகளே இடம் பெற்றிருந்தன. இருப்பினும், ஒன்றிய அரசு மறுக்கப்பட்டதால் முதலமைச்சர் குடியரசு தினத்தன்று சென்னையில் நடைபெற்ற அணிவகுப்பில் இந்த உறுதி இடம்பெறும் என்று கூறியது மட்டுமின்றி, இது அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வரும் என தெரிவித்தது. தமிழக மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார். மேலும், இந்த ஊர்திக்கு வழிநெடுக மக்கள் ஒன்று கூடி உணர்வை வெளிப்படுத்தி வரவேற்பு அளிக்கின்றனர் மத்திய அரசு மறுத்ததன் வாயிலாக இந்த தலைவர்களின் தமிழகம் முழுவதும் மீண்டும் நினைவூட்ட இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!