ஈரோடு சென்னம்பட்டி வனப்பகுதியில் வயது முதிர்வால் ஆண் யானை உயிரிழப்பு

ஈரோடு சென்னம்பட்டி வனப்பகுதியில் வயது முதிர்வால் ஆண் யானை உயிரிழப்பு
X

சென்னம்பட்டி வனப்பகுதியில் வயது முதிர்வு காரணமாக இறந்த ஆண் யானையின் தந்தங்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.

ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனப்பகுதியில் வயது முதிர்வு காரணமாக ஆண் யானை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரத்திற்கு உட்பட்ட வனபகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டிருந்தபோது, சில நாட்களுக்கு முன் உயிரிழந்த ஆண் யானையின் உடலை பார்த்துள்ளனர்.இது குறித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு யானையின் உடல் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை முடிவில், இறந்த ஆண் யானைக்கு 40 வயது இருக்கக்கூடும் எனவும் வயது முதிர்வின் காரணமாக யானை உயிரிழந்திருக்க கூடும் என மருத்துவர் தெரிவித்தார்.தொடர்ந்து யானையின் உடலில் இருந்த சுமார் 5 அடி நீளம் கொண்ட இரண்டு தந்தங்களை அகற்றி பாதுகாப்போடு வனசரக அலுவலகம் கொண்டு வந்தனர்.யானையின் உடல் மற்ற உயிரினங்களுக்கு இறையாக அப்படியே வனப்பகுதியில் விடப்பட்டது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது