கோபிச்செட்டிப்பாளையம் அருகே கர்ப்பிணி மூச்சு திணறலால் சாவு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கர்ப்பிணி மூச்சு திணறலால் சாவு
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே ஏழு மாத கர்ப்பிணி பெண் மூச்சுத்திணறலால் நேற்று உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே ஏழூரை சேர்ந்த வெங்கடாசலம் மனைவி சுமித்ரா (வயது 28). இரு ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சுமித்ரா கர்ப்பம் அடைந்தபோது சுவாசக் கோளாறால் அவதிப்பட்டார். இந்நிலையில் பிறந்த குழந்தை ஐந்து நாளில் இறந்தது. மீண்டும் கர்ப்பமடைந்து ஏழு மாதமான நிலையில், நேற்று முன்தினம் காலை மூச்சு திணறல் ஏற்பட்டது.

பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
the future of ai in healthcare