அந்தியூர் அருகே தாயின் கள்ளக்காதலால் மகள் தூக்கிட்டு தற்கொலை

அந்தியூர் அருகே தாயின் கள்ளக்காதலால் மகள் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

அந்தியூர் அருகே தாயின் கள்ளக்காதலால் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள நஞ்சமடைகுட்டை பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு சத்யா (வயது 18) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வளர்மதிக்கும் அந்தியூர் அடுத்துள்ள வெள்ளைபிள்ளையார்கோயில் பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு கடந்த மூன்று மாதங்களாக வளர்மதி, குருசாமியுடன் சென்றுவிட்டதாக தெரிகிறது.

இதனால் குருசாமியின் மனைவி ராசாத்தி நஞ்சமடைகுட்டையில் உள்ள நடராஜன் வீட்டிற்கு சென்று உன் மனைவியால் தான் என் கணவர் வீட்டிற்கு வருவதில்லை எனக் கூறி வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் மனமுடைந்த சத்யா நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற அந்தியூர் போலீசார் சத்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!