/* */

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு சாமி தரிசனம்

Erode News Today: ஈரோடு கிழக்கு தொகுதியின் அதிமுக வேட்பாளர் தென்னரசு விருத்தகிரீஸ்வரர் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

HIGHLIGHTS

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு சாமி தரிசனம்
X

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்த ஈரோடு கிழக்கு தொகுதியின் அதிமுக வேட்பாளர் தென்னரசு.

Erode News Today: ஈரோடு கிழக்கு தொகுதியின் அதிமுக வேட்பாளர் தென்னரசு விருத்தகிரீஸ்வரர் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா உயிரிழந்ததையடுத்து, அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நாளை திங்கட்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில், மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக தரப்பில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டு உள்ளார். தேமுதிகவின் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன், சுயேட்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள்.

கடந்த 10 நாட்களாக சூடுபிடிக்கத் தொடங்கிய தேர்தல் பிரசாரத்தில், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்தார். அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிந்தனர்.

இதே போல் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதராவாக அவரது கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் செய்து வந்தனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்றுடன் பிரசாரம் முடிவடையும் நிலையில், இறுதிகட்ட அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்றது. இன்று ஒரே நாளில் முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி தலைவர்கள் களத்தில் இறங்கி தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இதனையடுத்து, தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியிலிருந்து வெளி மாநிலத்தை சேர்ந்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பணிமனைகளை காலி செய்தனர். இதனைத்தொடர்ந்து, நாளை வாக்குப்பதிவும், மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று தரிசனம் செய்தார்.

நேற்றுடன் பிரச்சாரத்தை முடித்த அதிமுக வேட்பாளர் தென்னரசு, கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள விருதகிரீஸ்வரர் கோயிலுக்கு காலை சுமார் 7 மணி அளவில் வருகை தந்தார். திடீரென அங்கு வந்த தென்னரசு தொடர்ந்து அவர் அங்குள்ள சந்நிதிகளும்குச் சென்று தரிசனம் செய்தார்.

Updated On: 26 Feb 2023 8:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...