பவானி: குடிசை வீடு எரிந்து சேதம்.

பவானி: குடிசை வீடு எரிந்து சேதம்.
X

பைல் படம்.

பவானி அருகே குடிசை வீடு எரிந்து பொருட்கள் சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம் ஒலகடம் அருகே உள்ள கொலந்தபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். தனியார் பேருந்து நடத்துநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வாகினி . 7 மாத கைக்குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் வாகினி தனது தாத்தா ரங்கசாமி வீட்டிற்கு குழந்தையுடன் சென்றார். அப்போது வீட்டிலிருந்து புகை வந்துள்ளது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயிணை அணைத்தனர். இருப்பினும், வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!