எரிவாயு, பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன போராட்டம்

எரிவாயு, பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன போராட்டம்
X

எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்

எரிவாயு, பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டுவண்டியில் கியாஸ் சிலிண்டரை வைத்து ஊர்வலம் வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்

எரிவாயு மற்றும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தள்ளுவண்டி மற்றும் மாட்டுவண்டியில் கியாஸ் சிலிண்டரை வைத்து ஊர்வலமாக வந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம்

கியாஸ் சிலிண்டர் (எரிவாயு) மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுத்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலத்தில் எஸ்.ஆர்.டி. சந்திப்பு பகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சைக்கிள் ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை கட்சியின் சத்தி நகர செயலாளர் ஸ்டாலின் சிவகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தின்போது ஒரு தள்ளுவண்டியில் கியாஸ் சிலிண்டரை தூக்கி வைத்து, அதற்கு மாலை அணிவித்து, தள்ளுவண்டியை தள்ளியபடி கட்சியினர் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் சத்தியமங்கலத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோட்டு வீராம்பாளையத்தில் முடிவடைந்தது. இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் முருகன் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

புஞ்சை புளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டியில் பவானிசாகர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி மாட்டு வண்டியில் மோட்டார்சைக்கிள் மற்றும் கியாஸ் சிலிண்டரை வைத்து சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.ஊர்வலத்துக்கு பவானிசாகர் ஒன்றிய தலைவர் மகேகந்திரன் தலைமை தாங்கினார். ஊர்வலம் புஞ்சைபுளியம்பட்டி எஸ்.ஆர்.டி. நகர் பகுதியில் இருந்து தொடங்கி முக்கிய ரோடுகள் வழியாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil