கோபிசெட்டிபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசுவின் வாய் சிதைவு

கோபிசெட்டிபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசுவின் வாய் சிதைவு
X

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசுமாட்டின் தாடை கிழிந்ததை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு நாட்டு வெடிகுண்டை கடித்ததில் பசுமாட்டின் வாய் சிதைந்தது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் அண்ணா நகர் வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார். இவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மதன்குமார் தோட்டத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு தனது மாடுகளை விட்டு இருந்தார். பின்னர் மீண்டும் மாலை மாடுகள் வீடு திரும்பியது. அப்போது ஒரு பசு மாட்டின் வாய் சிதைந்து ரத்தம் சொட்ட சொட்ட இருப்பதை கண்டு மதன்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாட வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் வைக்கப்பட்ட நாட்டுவெடியை மாடு கடித்ததில் வாய் சிதைந்து ரத்த காயங்கள் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் வாய் சிதைந்த தகவல் பசு மாட்டிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதுது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு