நாட்டு வெடிகுண்டு வெடித்து உயிருக்கு போராடி வந்த பசுமாடு உயிரிழப்பு

நாட்டு வெடிகுண்டை கடித்ததால் தாடை சிதைவுற்று உள்ள பசுமாட்டையும் அதன் கன்றுக்குட்டியையும் படத்தில் காணலாம்.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே பங்களாப்புதூர் வடக்குதோட்டம் பகுதியில் வசிப்பவர் மதன்குமார். இவர் வளர்த்து வந்த பசுமாடு கடந்த 19 நாட்களுக்கு முன்பு, கன்றை ஈன்றது. இந்த நிலையில், ஐந்து நாட்களுக்கு முன்பு வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் பசுமாடானது மேய்ச்சலுக்கு விடப்பட்டது. அப்போது சமூக விரோதிகளால் வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டை தவறுதலாக கடித்ததில் தாடை பகுதி சிதைந்தது. இதனால், அந்த பசுமாடு தண்ணீர் மற்றும் உணவு அருந்த முடியாமல் மிகவும் அவதி அடைந்தது.
நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மதன்குமார் கொண்டு சென்றனர். பின்னர், வீட்டிற்கு மாட்டை அழைத்து வந்தார். இன்று அதிகாலை, பசுமாடு உயிரிழந்தது. பங்களாப்புதூர் போலீசார் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு மதன்குமார் தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து பசுமாட்டின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. பிறந்து 19 நாட்களே ஆன கன்றுக்குட்டி பால் குடிக்க முடியாமல் அந்த பசுமாட்டை ஏக்கத்துடன் பார்ப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu