ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 288 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் இன்று  புதிதாக 288 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 1,052 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் உச்சத்தை எட்டிய தொற்று பாதிப்பு பிறகு குறைய தொடங்கியது.

இன்று புதிதாக 288 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 928 ஆக உயர்ந்தது.

கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இன்று மட்டும் 1,052 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரை 1 லட்சத்து 24 ஆயிரத்து 526 பேர் குணமடைந்தனர்.

தற்போது 5 ஆயிரத்து 673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 729 ஆக உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!