கவுந்தப்பாடி மார்க்கெட் கமிட்டியில் ரூ.32.70 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்

கவுந்தப்பாடி மார்க்கெட் கமிட்டியில் ரூ.32.70 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்
X

பைல் படம்.

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லம் ரூ.32.70 லட்சத்திற்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நேற்று நடந்தது.

முதல் தரம் (திடம்) 60 கிலோ, மூட்டை 2900 ரூபாய் முதல் 2950 ரூபாய் வரை விற்பனையானது. இரண்டாம் தரம்(மீடியம்) 2800 ரூபாய் முதல் 2880 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான 1384 மூட்டைகளில் 1136 மூட்டைகள் 32.51 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!