அந்தியூர் விற்பனை கூடத்தில் பருத்தி ஏல விற்பனையை துவக்கி வைத்த எம்எல்ஏ

அந்தியூர் விற்பனை கூடத்தில் பருத்தி ஏல விற்பனையை துவக்கி வைத்த எம்எல்ஏ
X

அந்தியூர் விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் துவங்கியது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், திங்கட்கிழமை (இன்று) மாசி பட்ட பருத்தி ஏலம் விற்பனையை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (ஜூன்.,19) திங்கட்கிழமை பருத்தி விற்பனையானது மின்னணு ஏல முறையில் துவங்கியது.

இதில், அந்தியூரை சுற்றியுள்ள மைக்கேல்பாளையம் எண்ணமங்கலம் சங்கராபாளையம் அத்தாணி பிரம்மதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் பருத்தி விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

தொடர்ந்து, மாசி பட்ட பருத்தி விற்பனை துவக்கப்பட்ட நிலையில் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விற்பனையை துவக்கி வைத்தார். சுமார் 450 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில், குவிண்டாலுக்கு அதிகபட்ச விலையாக ரூ.7,066-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ. 6,239-க்கும், சராசரி விலையாக ரூ.6,652-க்கும் ஏலம் போனது.

இன்றைய வர்த்தகத்தில் மொத்தம் ரூ. 29 லட்சத்திற்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டதாக விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் விற்பனைக்குழு வேளாண்மை துணை இயக்குனர் சாவித்திரி, கண்காணிப்பாளர் ஞானசேகர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா