அந்தியூர் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.99.16 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.99.16 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
X

பைல் படம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில், 99 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு அந்தியூர், அத்தாணி, கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், சென்னம்பட்டி, ஆப்பக்கூடல், கோவிலூர், எண்ணமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,929 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

மொத்தம் 974.53 குவிண்டால் பருத்தி, குறைந்தபட்ச விலையாக 100 ரூபாய் 19 பைசாவிற்கும் அதிகபட்ச விலையாக 111 ரூபாய் 39 பைசாவிற்கும் விற்பனையானது. நேற்றைய வர்த்தகத்தில் மொத்தம் 99 லட்சத்து 16 ஆயிரத்து 86 ரூபாய்க்கு ஏலம் போனதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார். தர்மபுரி, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் பருத்தியை கொள்முதல் செய்து சென்றனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself