அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.9.69 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.9.69 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
X

பைல் படம்.

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில், 9 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு அந்தியூர், அத்தாணி, கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், சென்னம்பட்டி, ஆப்பக்கூடல், கோவிலூர், எண்ணமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 286 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

மொத்தம் 85.14 குவிண்டால் பருத்தி, குறைந்தபட்ச விலையாக 114 ரூபாய் 99 பைசாவிற்கும் அதிகபட்ச விலையாக 125 ரூபாய் 99 பைசாவிற்கும் விற்பனையானது.நேற்றைய வர்த்தகத்தில் மொத்தம் 9 லட்சத்து 69 ஆயிரத்து 141 ரூபாய்க்கு ஏலம் போனதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!