பவானி அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது

பவானி அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது
X

தீயணைப்பு துறையினர் தீயிணை அணைத்த போது எடுத்த படம்

பவானி அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. விவசாய கூலி தொழிலாளியான இவர் வீட்டின் அருகே குடிசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற போது, திடீரென குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.


தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜான்சன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இருப்பினும் வீட்டில் இருந்த எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தொடர்ந்து சிலிண்டரை அப்புறபடுத்தின் காரணமாக பெரும் அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருப்பதாக தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture