ஈரோடு மாவட்டத்தில் 41 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 41 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
X

தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் சிறுவர்கள்.

ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்களில் 41 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த 3-ம் தேதி முதல், தொடங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 523 பள்ளிகளில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 260 மாணவ, மாணவிகள் உள்ளனர். அவர்களுக்கு கோவாக்சின் தடுப்பு ஊசி செலுத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 41 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று 4-வது நாளாக தொடர்ந்து சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து நடைபெறுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!