ஈரோடு மாவட்டத்தில் இன்று 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இன்று 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 20 ஆவது கட்ட கொரோனா‌ தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகா தார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் என மொத்தம் 497 மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதன் மூலமாக மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!